Tuesday, December 25, 2012

தஞ்சாவூரும் தண்ணீர் பஞ்சமும்

வயலில் நட்ட  நெற்பயிர்கள் முக்கால்வாசி  சூழலை தாண்டி வந்து  நெற்மணிகள் கருபிடிக்கும் சூழலில் உள்ளது. தட்டு  தடுமாறி இதுவரை  நட்டவயல்களுக்கு தண்ணீர் கிடைத்துவிட்டது.

இனிதான் தண்ணீர் மிக அவசியம்  என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு  மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.

மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே  இருக்க  ஒரு மழையுடன் தன்  இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.

குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு  விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு  கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே  இருக்கதான் செய்கிறார்கள்.

 இன்னும் சில  மாதங்களில்  இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று   பார்ப்போம்.

1 comment:

Unknown said...

நாண்
http://www.tamilkadal.com/?p=838
தேவையானவை – மைதா மாவு – 2கப், பால் – அரை கப், தயிர் – கால் கப், ஈஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – மைதாவுடன் நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும், பாலை வெது வெதுப்பாக சூடாக்கி, அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து,…..

LinkWithin

Related Posts with Thumbnails